2 நாள்கள் சரிவுக்குப் பின் சந்தையில் உற்சாகம்! 14-08-2018Sponsoredகடந்த இரண்டு நாள்கள் சரிவினைக் கண்ட இந்திய பங்குச் சந்தை, சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தினாலும், சில நல்ல காலாண்டு அறிக்கைகள் முன்னிட்டும், ரீடைல் பணவீக்கம் ஒன்பது மாதத்தில் காணாத அளவு குறைந்த நிலையில் உயர்ந்ததாலும் இன்று வர்த்தக நேரம் முழுதும் பாசிட்டிவ் திசையிலேயே பயணித்து நல்ல லாபத்துடன் முடிந்தது. 


மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 207.10 புள்ளிகள் அதாவது 0.55 சதவிகிதம் உயர்ந்து 37,852.00 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 79.35 புள்ளிகள் அதாவது 0.7 சதவிகித லாபத்துடன் 11,435.10-ல் முடிவுற்றது.

மருத்துவத் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டு, சந்தையின் பாசிட்டிவான முடிவுக்கு உதவின. இதற்கு சன் பார்மாவின் சிறப்பான காலாண்டு அறிக்கை ஒரு முக்கிய காரணம்.

வங்கிப் பங்குகளில் இன்று பொதுவாக நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ரியல் எஸ்டேட் துறை பங்குகளும் உயர்ந்தன.

ஜூலை மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட துரிதமான வேகத்தில் குறைந்ததாக நேற்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பு தெரிவித்தது சந்தையின் உற்சாகத்துக்கு உதவியது.

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 5.09 சதவிகிதம் உயர்ந்தது. இது ஜூன் மாதத்தின் 5.77 சதவிகித உயர்வை விடவும், எதிர்பார்த்த 5.22 சதவிகிதத்தை விடவும் குறைவாகும்.

டாலருக்கு 70 என்ற சரிவைக் கண்டபின், இந்திய ரூபாய் சற்று சுதாரித்து, 69.85 என்ற நிலைக்கு வந்ததும் சந்தையின் ஏறுமுகத்துக்கு ஒரு காரணம் எனலாம்.

துருக்கி நாட்டின் கரன்சியான லிரா, அந்நாட்டின் மத்திய வங்கி எடுத்திருக்கும் சில முடிவுகள் காரணமாக, சற்று சுதாரித்திருப்பது ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. மேலும், ஜெர்மனி நாட்டின் சில பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கைகளும் ஐரோப்பிய சந்தைகளின் உயர்வுக்கு உதவின.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

Sponsored


சன் பார்மா 6.9%

Sponsored


யெஸ் பேங்க் 2.9%

லூப்பின் 2.6%

பஜாஜ் பைனான்ஸ் 2.5%

சிப்லா 2.4%

அல்ட்ராடெக் சிமென்ட் 2.4%

ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 2,2%

ஆக்ஸிஸ் பேங்க் 2,15%

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2%

டெக் மஹிந்திரா 2%Trending Articles

Sponsored