நாட்டின் 72-வது சுதந்திர தினம் -செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடிSponsoredநாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நாட்டின் 72-வது சுதந்திர தின கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க டெல்லி மற்றும் காஷ்மீர் எல்லையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புபடை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சுதந்திர தினவிழாவில் பல அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் போன்ற பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களும் செங்கோட்டை முன் கூடியுள்ளனர். 

Sponsored


Sponsored


இது பிரதமர் மோடியின் ஆட்சியில் கடைசி சுதந்திரதின விழா. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று பிரதமர் நிகழ்த்தும் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னதாக ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய பின்னர் பிரதமர் மோடி விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பிறகு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுகொண்டார்.Trending Articles

Sponsored