உங்கள் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் உள்ளதா? - அமித் ஷாவைச் சாடும் மம்தா



`குடியுரிமையை நிரூபிக்க அமித் ஷாவின் தந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் உள்ளதா?' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சர்ச்சையாகப் பேசியுள்ளார். 

Sponsored


அஸ்ஸாம் மக்களின் தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) விவகாரம் தொடர்பாக பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே நீண்ட நாள்களாக மோதல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றம்சாட்டி வருகின்றனர். 

Sponsored


இது குறித்து நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ``அஸ்ஸாம் மாநில மக்கள் அம்மாநில அரசால் துன்புறுத்தப்படுகின்றனர். முன்னதாகவே சிலர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் அஸ்ஸாமில் என்.ஆர்.சி அமைதியான முறையில் நடந்தால் ஏன் அங்கு 400 முகாம்களில் காவல்துறையினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். என்.ஆர்.சி சான்றிதழ் மொழி அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. அஸ்ஸாமில் நிராகரிக்கப்பட்ட 40 லட்சம் மக்களில் 38 லட்சம் பேர் பெங்காலி மொழி பேசுபவர்கள். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?

பெங்காலி பேசுவது மட்டுமே பெரும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக தலைவர் அமித் ஷா அவரின் தாய் மற்றும் தந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் உள்ளதா அதை அவர் பாதுகாப்பாக வைத்துள்ளாரா என அமித் ஷாவிடம் கேட்க வேண்டும். நாட்டில் பல பேர் தங்களின் ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருப்பதில்லை. ஏன் மகாத்மா காந்தியின் குடும்பத்தாரிடமே சில நாள்கள் கழித்து குடியுரிமை ஆவணங்கள் இருக்குமா என்பது தெரியாது. அதனால் அவர்கள் இந்தியர்கள் இல்லை என ஆகுமா. பாஜக அவர்களின் அரசியலுக்காக மக்களைப் பிரிக்கிறது” எனக் கடுமையாக விமர்சித்தார்.
 

Sponsored




Trending Articles

Sponsored