1,100 மீட்டர் நீளத்தில் தேசியக் கொடி!- வியப்பில் ஆழ்த்திய சூரத் மக்கள்Sponsoredகுஜராத் மாநிலம் சூரத்தில் 1,100 மீட்டர் நீளம் உள்ள மூவர்ண தேசியக் கொடி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கொடியை மக்கள் பிடித்திருக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

நாட்டின் 72-வது சுதந்திர தினம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளனர். பெண்கள், தங்கள் பாதைகளை அமைத்துக்கொள்ள முழுச் சுதந்திரம் அளிக்க வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். 

Sponsored


இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் படும் விமரிசையாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 1,100 மீட்டர் கோடி தயாரிக்கப்பட்டுள்ளது. சூரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்த மாபெரும் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் கைகளில் கொடியினைப் பிடித்தவாறு நிற்கும் வீடியோ காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 1,100 மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண தேசியக் கொடியை மக்கள் ஏந்தி நிற்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored