`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது!’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloodsSponsoredகேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 9ம் தேதி முதல் பெய்து வரும் மழையில், இன்றுதான் அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Photo Credit: Twitter/@adgpi

Sponsored


கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பெய்து வருவதால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன. தொடர் மழையால் ஒருபுறம் அணைகள் நிரம்பி வழிதல், ஒரு புறம் நிலச்சரிவு என முற்றிலும் கேரள மாநிலம் முடங்கிப்போயுள்ளது. முக்கிய 22 அணைகளும் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது கடந்த 94 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பேரழிவு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருப்பதால்,  மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோழிக்கோடு, கொச்சி விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

Sponsored


இந்நிலையில், மழையின் காரணமாக இன்று ஒரு நாளில் மட்டும் கேரளாவில் 25 பேர் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஆகஸ்ட் 9ம் தேதி முதல் பெய்து வரும் மழை, இன்று அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை மொத்தம் 67 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இன்று மட்டும் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Photo Credit: Twitter/@adgpi

அனைத்து நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல கிராமங்கள், நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சில நாள்களுக்கு மழைபெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சரும், பிரதமரும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளனர். இதில், மிகவும் கவலைதரக்கூடிய விஷயத்தை முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உண்டாக்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனை 139 அடியாக குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது" என்று தெரிவித்துள்ளார். Trending Articles

Sponsored