`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்!Sponsoredமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவந்தார். இந்தநிலையில், அவருக்குச் சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாகக் கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். அவரை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்தநிலையில் நேற்று அவரின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ``அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு, கவலைக்கிடமாக இருக்கிறது என்றும், அவருக்கு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். இதை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவரின் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Sponsored


இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல், ஒவ்வோர் இந்தியருக்கும் பா.ஜ.க-வினருக்கும் இருக்கும். அவரின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. வாஜ்பாய் தேசத்துக்காக வாழ்ந்து வந்தவர். அடல் ஜீ தலைமையில், 21-ம் நூற்றாண்டின் வலுவான, வளமான உள்ளடக்கிய இந்தியாவின் அஸ்திவாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவரின் கொள்கை இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் தொட்டுள்ளது. அவரின் இறப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிய இழப்பு. அவருடன் பயணித்த எண்ணிலடங்கா நினைவுகள் என்னுள் இருக்கிறது. விடா முயற்சி மூலமாகப் பா.ஜ.க-வை அவர் கட்டமைத்தார். பா.ஜ.க-வின் கொள்கைகளைப் பரப்ப அவர் இந்தியா முழுவதும் பயணித்துள்ளார். அதனாலேயே, இப்போது பல மாநிலங்களில் பா.ஜ.க வலுவான சக்தியாக மாறியுள்ளது" எனக் கூறியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored