`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்!Sponsoredமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அவரின் நண்பரும் பா.ஜ.க மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் இன்று மாலை 5.05 மணிக்கு உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகச் சிறுநீரகத் தொற்றுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவரின் உடல்நிலை நேற்று முதல் கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று நலம்விசாரித்து வந்தனர். ஆனால், சிகிச்சைப் பலனளிக்காததால் அவர் இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் வாஜ்பாயின் உற்ற நண்பரும் பா.ஜ.க மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Sponsored


அதில், ``வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன். இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக விளங்கிய வாஜ்பாய் இழப்பை தெரிவிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். மூத்தவர் என்பதைவிட 65 ஆண்டுகளுக்கும் மேலாக என் உற்றத் தோழனாக தோள் கொடுத்த நெருங்கிய நண்பரை இழந்து தவிக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்-ல் தொடங்கி ஜனசங்கம் உருவானது வரை எங்கள் பயணத்தை மறக்க முடியாது. மத்திய அரசில் முதல்முறையாகக் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தின் முன்னோடியாக இருந்தவர் என வாஜ்பாய் என்றும் நினைவூகூரப்படுவார். அவருக்குத் துணையாக 6 ஆண்டுகள் அவரது தலைமையில் பணி புரிந்தது எனக்கு மிகவும் பெருமை" என உருக்கமாகக் கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored