முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது



Sponsored



முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4  மணிக்கு நடைபெறுகிறது.

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்துவந்தார். அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாகக் கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். இதை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. வாஜ்பாய் உடல், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலிசெலுத்திவருகின்றனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் காலை 7.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட உள்ளது. மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரையில் இறுதி ஊர்வலம் நடைபெறும். இறுதிச்சடங்குகள் மாலை 4 மணிக்கு நடைபெறும். இதற்காக, டெல்லி விஜய்காட் பகுதியில் உள்ள ஸ்மிரிதி ஸ்தலில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored