"அமித் ஷா ஜீ மைக் ஆஃப் பண்ணிட்டார்" -ராகுல் கிண்டலால் எழுந்த சிரிப்பலை!Sponsoredபுதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி பேசும்போது,  'அமித் ஷா ஜீ மைக் ஆஃப் பண்ணிட்டார்' என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். 

கலப்பு கலாசாரத்தைக் காப்பாற்றும் நோக்கத்தோடு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த  6-வது மாநாட்டில்   ('Sanjhi Virasat Vacha Sammelan ' - Save culture convention - 6th edition),  காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாநாடு புதுடெல்லியின் டல்கட்டோரா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

Sponsored


இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசிக்கொண்டிருக்கையில், தொழில்நுட்பக்  கோளாறு காரணமாக மைக்கில் சிறு சிக்கல் ஏற்பட்டது. பின்னர், ஒரு சில நொடிகளில் அது சரிசெய்யப்பட்டு, மீண்டும் பேசத் தொடங்கினார்  ராகுல். அப்போது அவர், " அமித்ஷா ஜீ மைக் ஆஃப் பண்ணிட்டாரு போல..." என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டது, அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Sponsored


மைக் கோளாறு செய்யும் முன்பு அவர், “மக்களின் உரிமைகளை மத்திய அரசு தடுக்கிறது” என பா.ஜ.க வை  கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் மைக் பிரச்னை செய்யவே, அவர் அவ்வாறு தெரிவித்தார். Trending Articles

Sponsored