வெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு!Sponsoredகேரளாவில் தொடர்ந்து மழை கொட்டிவருகிறது. மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 94 பேர் வெள்ளத்துக்கு பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் இருந்து தப்பிக்க, நடிகர் ஜெயராம், அவரின் மனைவி பார்வதி, மகள் மாளவிகா ஆகியோர் திருச்சூர் நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர். குதிரன் என்ற இடத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில் ஜெயராம் குடும்பத்தினர் வந்த கார் சிக்கிக் கொண்டது. உடனடியாக வடக்கன்சேரி போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஜெயராம் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர். தற்போது, போலீஸ் நிலையத்தில் அவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொச்சி அருகே ஆலுவா நகரம் கடங்கநல்லூர் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. நகரத்தில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்அப்பில் வீடியோ வழியாக பிரேமானந்தம் என்பவரின் குடும்பத்தினர் தங்களை எப்படியாவது காப்பாற்றுமாறு கதறியபடி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  வீடியோவில் குழந்தை ஒன்றும் உள்ளது. அந்தக் குழந்தைக்கு பால் கிடைக்காமல் தவிப்பதாக அவரின் குடும்பத்தினர் கண்ணீருடன் கூறியுள்ளனர். ஏதாவது செய்து எங்களை இங்கே இருந்து வெளியேற்றிக் காப்பாற்றுமாறு மீட்புப்படையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவிவருகிறது. 

Sponsored


Sponsored


PIC; Manorama

கேரளாவில் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மிகப் பெரிய அணையான இடுக்கி அணை, அதன் முழு கொள்ளளவான 403 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் 100 செ.மீ மழை பொழிந்துள்ளது. இதனால், மதகுகள் 4 மீட்டர் உயரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. கொச்சி நெடும்பாஞ்சேரி விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், ஆகஸ்ட் 26-ம் தேதி வரை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு முடிவடைந்ததும், பிரதமர் மோடி இன்று கேரள வெள்ளச் சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட வருகிறார். Trending Articles

Sponsored