அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட்! - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods



Sponsored



கேரளாவில் கசர்கோட்டை மாவட்டத்தை  தவிர  அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. 


 

கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி பெய்ய தொடங்கிய கனமழை இரக்கமின்றி இன்றுவரை தொடர்கிறது.  கனமழைக்கு இதுவரை 97 பேர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த வாழ்விடங்களைவிட்டு, மாநிலம் முழுவதிலும் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். கேரளாவின் 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையில் மிதக்கின்றன. வரும் 19-ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.  

Sponsored



 

Sponsored


ரயில் மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்டது. கொச்சி விமான நிலையமும் வெள்ளத்தில் மிதக்கிறது.  ஆசியாவின் மிகப்பெரிய அணையாக கருதப்படும் இடுக்கியில் இருந்து கடந்த மூன்று நாள்களாக நொடிக்கு 10 முதல் 15 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்கள் நிலச்சரிவுகளால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. 


 

கேரளா முதல்வர் பினராயி விஜயன், கனமழை குறித்த தகவல்களை சமூக வலைதளம் வாயிலாக மக்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். கேரள மக்கள் வரலாறு காணாத மழைப் பொழிவை சந்தித்து வருகின்றனர். கேரள மக்கள் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க முதல்வர் பினராயி தன்னம்பிக்கை அளித்து வருவதாக இணையத்தில் கேரள மக்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். மாநிலத்தில் இனிவரும் விழாக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 30 கோடி ரூபாய் நிதியும் வெள்ள நிவாரண நிதியில்  சேர்க்கப்பட்டுவிட்டது. `உங்களால் முடிந்த உதவியை வெள்ள நிவாரண நிதியாக வழங்குங்கள்’ என்று மற்ற மாநில மக்களிடம்  நேரடியாக கேட்டு கொண்டுள்ளார் பினராயி. மத்திய அரசிடம்  தொடர்ந்து நிவாரணம் கேட்டு வலியுறுத்தி வருகிறார்.


 

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை விமானம் மூலமாக பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் பார்வையிட்ட பிறகுதான் பினராயி விஜயனின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா என்பது தெரியவரும். 

இதனிடையே #SaveKerala, #KeralaFloods, #KeralaFloodRelief, #standwithkerala போன்ற ஹேஷ் டாக்குகளின் கீழ் கேரள மக்களுக்காக பிரார்த்தனைகள் குவிந்து வருகின்றன. 



Trending Articles

Sponsored