`4 மாவட்டங்கள்; 1,568 முகாம்கள்; 2,23,000 மக்கள்!' - பினராயி விஜயன் வேதனைSponsoredகேரளாவில் பெய்துவரும் பலத்த மழையால் நான்கு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Photo Credit -twitter/@JosephMichaelJ

Sponsored


கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய மழை இன்று வரையிலும் அதன் தீவிரத்தைக் காட்டிவருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 160-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,568 முகாம்களில் 2,23,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் இன்னும் அதிகளவில் தேவைப்படுகிறது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பம்பை, பெரியாறு, சாலக்குடி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், ஆபத்தான பகுதிகளில் மக்கள் தனித்துவிடப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் அவர்களை மீட்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. 

Sponsored


இன்று காலை 6 மணியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மாநிலத்தில் 14 ராணுவக் குழுவினர் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். திருச்சூர், வயநாடு, செங்கன்னூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்படைக் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். இருப்பினும், மீட்புப் பணிகளுக்காக 16 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தேவைப்படுகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசிடம் முறையிட்டுள்ளோம். இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் தனித்துவிடப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. எனவே, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளோம்' என்றார். Trending Articles

Sponsored