`தனக்குக் கிடைத்த ரூ.1.5 லட்சம் நன்கொடையை நிவாரண நிதிக்கு அளித்த மீன் விற்ற மாணவி' - கேரளாவில் நெகிழ்ச்சி!Sponsoredமீன் விற்று குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே படித்த மாணவி ஹனான் கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் நிதி வழங்க முடிவு செய்துள்ளார்.

கொச்சியில் மீன் விற்று உழைத்து படித்த கல்லூரி மாணவி ஹனான் குறித்து செய்தி வெளியானதும் பல்வேறு இடஙகளில் இருந்து அவருக்கு உதவி கிடைத்தது. அதே வேளையில் மாணவியின் நிலை குறித்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்தும் பலர் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளங்களில் ஹனான் குறித்து வீடியோ வெளியிட்டு சிலர் கேலி செய்தனர். ஹனான் குறித்து அவதூறு பரப்பியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையிட்ட பின்னரே பிரச்னை முடிவுக்கு வந்தது.

Sponsored


தற்போது கேரளாவே மழை வெள்ளத்தில் சிக்கித் தத்தளிப்பதைப் பார்த்த ஹனான், முலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒன்றரை லட்சம் வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மனோரமா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ''கோதமங்கலம் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை நானும் சென்று பார்த்தேன்.வீடு இழந்து சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். நான்பட்ட கஷ்டத்தின்போது கேரள மக்கள் என் மீது காட்டிய அன்பை மறக்க முடியாது. இந்த மக்களின் அன்புக்கு கைம்மாறு செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதுகிறேன். மாத்ரூபூமி இதழில் என்னைப் பற்றிய செய்தி வெளியானதும், ஓரிரு நாளில் எனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்தது. அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்'' என்று ஹனான் தெரிவித்திருக்கிறார். 

Sponsored


ஹனான் பற்றி இணையத்தளத்தில் அவதூறு பரப்பிய பிறகு, அவர் எந்த நன்கொடையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது, ஹனான் இசை ஆல்பம் ஒன்றில் பாடி வருகிறார். பிரபல பின்னணிப் பாடகி `வைக்கம்’ விஜயலட்சுமியின் வாழ்க்கையை முன்வைத்து திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. அதில், நடிக்க ஹனானுக்கு அழைப்பு வந்துள்ளது. மிட்டாயி தெரு, வைரல் - 2019 ஆகிய படங்களிலும் நடிக்க ஹனான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி ஆர்டிஸ்டாகப் பணியாற்றவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. Trending Articles

Sponsored