`கர்நாடகாவையும் மிரட்டும் பருவமழை..!' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்Sponsoredதென்மேற்குப் பருவமழை கர்நாடகாவிலும் தீவிரம் அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

கேரளாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் வெள்ளத்தால் மாவட்டங்கள் தத்தளித்து வருகிறன. இதே நேரத்தில், கர்நாடகாவிலும் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தென் கர்நாடகாவில் உள்ள 6 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும், குடகு மாவட்டம் பலத்த சேதம் அடைந்துள்ளது. சுற்றுலா வாசிகளை அதிகம் கவரும் குடகில் காபி தோட்டங்கள் அதிகம். கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையால் அதிகளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 200 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 20,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். 

Sponsored


இதுவரையிலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாநில அரசின் சார்பாக ரூ.200 கோடி நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று நிலச்சரிவால் இடிந்து விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் நிலச்சரிவால் ஏற்பட்ட பள்ளத்தில் மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Video:Youtube/CGTNTrending Articles

Sponsored