``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது!” – தேனி மாவட்ட விவசாயிகள்Sponsoredட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வெள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலிருந்து மூன்று இலக்க எண்ணுக்கு மாறியிருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட வெள்ள மீட்புக் குழுவினரும் முப்படையும் இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தொடரும் மழை காரணமாக அனைத்து அணைகளிலும் தண்ணீர் வந்து சேர்ந்துகொண்டேயிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியைக் கடந்து 142.20 அடியாக உள்ளது.

இது மூன்றாவது முறை:

Sponsored


பெரும் அரசியல், சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு 2014ல் அந்தத் தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. 136 அடியிலிருந்து அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், மெயின் அணைக்கு அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்ப்பு. அதுவரை முல்லைப் பெரியாறு அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்று கூறிவந்த கேரளாவுக்கு இது பேரிடியாக இருந்தது. இரு மாநிலத்துக்கும் இடையே நடைபெற்று வந்த தண்ணீர் அரசியலில் தாமதத்துக்குப் பின்னரே நீதி கிடைத்தது.

Sponsored


உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கிய ஆண்டே 142 அடி தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்பட்டது. அதற்கு அடுத்த 2015-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக 15/08/2018 அன்று 142 அடியைத் தொட்டது அணையின் நீர்மட்டம்.

139 அடியாகக் குறைக்க வேண்டும்:

``முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியதும் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டன. இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். மாபெரும் இடுக்கி அணை நிரம்பி ஏற்படுத்திய வெள்ளத்தால் மத்திய கேரளமே மிதந்துவரும் சூழலில், முல்லைப் பெரியாறு அணை உடைந்து நேராக இடுக்கி அணைக்கு நீர் வந்தால் இடுக்கி அணையும் உடையும் என்ற கேரள மக்களின் அச்சத்தின் வெளிப்பாடாகவே கேரள முதல்வர் அப்படி ஒரு கடிதத்தை எழுதினார். பலமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை, பலமற்ற அணை என்று கூறி 70 களிலிருந்து சொல்லிவரும் கேரளா தன் மக்களையும் அதற்கு ஏற்றவாறு பழக்கிவந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை என்றாலே மக்கள் பயப்படும் சூழலை உருவாக்கி வைத்துள்ளது. இதெல்லாம் ஒரு புறம் என்றால், கேரளாவின் இன்றைய சூழலிலும் இதே நிலைப்பாட்டில் இருப்பது வேதனையான ஒன்று” என்கின்றனர் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள்.

142 அடியைக் கடந்தது நீர்மட்டம் :

``மெயின் அணையின் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்பதே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால், அதற்கான எந்தப் பணியையும் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டுள்ளது கேரளா. 142 அடியைத் தொட்டதும் அணைக்கு ஆபத்து என்று பொய்ப் பிரசாரம் செய்து கடந்த இரண்டு முறையும் தண்ணீரைத் திறந்துவிட்ட கேரள அரசினால் இந்த முறை எதுவும் செய்ய முடியவில்லை. 142 அடியை அணை தொட்டதும், அதிக தண்ணீர் வெளியேற்றப்பட்டும், நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே சென்று 142.20 அடியைத் தொட்டது. இதுவரை பலமற்ற அணை என்று கூறிவந்த கேரளாவின் பொய்ப் பிரசாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மக்களை வாழவைக்குமே அன்றி யாரையும் சாகடிக்காது. எங்களை வாழவைக்கும் அணை உங்களைச் சாகடித்துவிடாது. அதற்கு வாழவைக்க மட்டுமே தெரியும். இனியாவது சகோதரத்துவத்துடன் இருப்போம்!” என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொல்கிறார்கள் விவசாயிகள்.

கடந்தகாலத்தை எல்லாம் மறந்துவிட்டு இப்போது கேரளாவுக்கு உதவுவதே மனிதம். நம்மால் ஆன உதவிகளைக் கேரளாவுக்குச் செய்வோம்!Trending Articles

Sponsored