கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் டெல்லிSponsoredகேரள மாநிலத்துக்கு ரூ.10 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கவுள்ளதாக டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளப் பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.  மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் மாநிலமே  வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. மழையால் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாதுகாப்புக் கருதி பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

Sponsored


இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில்,  `` 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான வெள்ளத்தைக் கேரளா சந்தித்துள்ளது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 324 பேர் உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

Sponsored


இதனையடுத்து, கேரள மாநிலத்துக்கு ரூ.10 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கவுள்ளதாக டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர-சகோதரிகளுக்கு அனைவரும்  நிதியுதவி அளிக்குமாறு தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.Trending Articles

Sponsored