கிராமப்புற மக்களிடம் நபார்டு வங்கி நடத்திய சர்வே... விவசாயக் குடும்பங்களின் வருமானம் அதிகரித்துள்ளதா?Sponsoredதேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) 2016-17-ம் ஆண்டுக்குக் கிராமப்புற மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவுகள் சில ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு இந்தியாவின் 29 மாநிலங்களில், 245 மாவட்டங்களில், 40,327 கிராமப்புற குடும்பங்களிடம் (1,87,518 பேர்) நடத்தப்பட்டது. வருடத்துக்கு ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் 1,07,172 ரூபாய். 2012-13-ல் இருந்ததைவிட 12% உயர்ந்துள்ளது. அதேபோல கிராமப்புற விவசாயம்சாரா குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் 87,228 ரூபாய். ஒட்டுமொத்தமாகக் கிராமப்புற குடும்பங்களின் (விவசாயம் மற்றும் விவசாயம் சாரா) சராசரி ஆண்டு வருமானம் 96,708 ரூபாய்.

இதேபோன்ற கணக்கெடுப்பு 3 வருடங்களுக்கு (2012-13) முன்பு தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) நடத்தியது. அப்போது கிராமப்புற குடும்பத்தின் சராசரி வருமானம் 77,112 ரூபாயாக இருந்தது. தற்போதுள்ள முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் 39% உயர்ந்துள்ளது என நபார்டு தலைவர் அர்ஸ் குமார் பன்வாலா 16.8.18 அன்று நடந்த அகில இந்திய கிராமப்புற நிதிநிலை கணக்கெடுப்பில் (NAFIS) கூறினார்.

இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகளை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டார். 29 மாநிலங்களில் 190 மாநிலங்கள் இந்திய சராசரி வருமானத்தைவிட அதிகமாக உள்ளது எனவும் 15 மாநிலங்களில் 2012-13-ல் இருந்து 10.5% உயர்ந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

Sponsored


Sponsored


விவசாயக் குடும்பத்தின் வருமானம் பின்வருமாறு பகிரப்பட்டுள்ளது:
35% விவசாய உற்பத்தி
34% விவசாயக் கூலி ஊதியம்
16% இதர சம்பளம்
8% கால்நடை & 7% பிற தொழில்கள்

கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்தக் குடும்பங்களின் வருமானம் விவசாயம் சாரா குடும்பங்களைவிட 23% அதிகமாகவுள்ளது. சராசரியாக விவசாயக் குடும்பங்களின் கடன் நிலுவைத் தொகை 1,04,602 ரூபாயாகவும் விவசாயம் சாரா குடும்பங்களின் கடன் நிலுவைத் தொகை 76,731 ரூபாயாகவும் உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்கது 88% கிராமப்புற குடும்பத்தினர் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், 55% மக்களிடம் எந்த சேமிப்பும் இல்லை. அவர்களின் சராசரி வருட சேமிப்புத் தொகை 17,488 ரூபாய். 26% விவசாயக் குடும்பங்கள் மற்றும் 25% விவசாயம் சாரா குடும்பங்கள் ஏதாவதொரு காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆக ஓய்வூதியம் பெறுபவர்கள் 18.9% லிருந்து 20.1% ஆக உயர்ந்துள்ளனர். இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் நில உடைமைகள் குறைந்துள்ள நிலையிலும் விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானம் உயர்ந்துள்ளது, வறுமை நிலை குறைந்து வருவதாக ராஜீவ் குமார் கூறினார். `இந்தக் கணக்கெடுப்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்' என நபார்டு தலைவர் அர்ஸ் குமார் பன்வாலா தெரிவித்தார்.Trending Articles

Sponsored