மோசமான வானிலை... சவாலை முறியடித்து ஹெலிகாப்டரை இயக்கி 26 பேரை மீட்ட கேப்டனின் அந்தத் தருணம்Sponsoredகேரளாவில் 100 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. கடந்த 8-ம் தேதி தொடங்கிய பருவமழை இடைவிடாது கொட்டித்தீர்த்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் ஓயாமல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இடுக்கி, வயநாடு, ஆலப்புழா உள்ளிட்ட 14 மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட மழை 324 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. கொட்டுத் தீர்க்கும் மழையில் கண்ணீருடன் கேரள மக்கள் தவித்து வருகின்றனர். 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒருசில முகாம்களில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான அடிப்படைத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகின்றன. 

Sponsored


மாநிலம் முழுவதும் கடற்படை, விமானப் படை, ராணுவம், கடற்கரை பாதுகாப்பு குழு, தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இடைவிடாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்களது சேவை மிகவும் இன்றியமையாதது. இந்தநிலையில், நேற்று மீட்புப் பணியின்போது இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் பி.ராஜ்குமார் சாதுர்யமாகச் செயல்பட்டு 26 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இவரது சேவை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Sponsored


இடைவிடாது பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்கள் கட்டடங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால், மீட்புப் பணியில் ஈடுபடுவது விமானிகளுக்குக் கடும் சவாலாக உள்ளது. மோசமான வானிலையும்கூட சேர்ந்ததால் ஹெலிகாப்டர்களை இயக்குவதும் அவர்களுக்கு சவால்தான். இந்த இடர்பாடுகளையும் பொருட்படுத்தாமல், ஆபத்தான பகுதிகளையும் கடந்து, SK42B ரக ஹெலிகாப்டரை கவனமாக இயங்கியுள்ளார் கேப்டன் ராஜ்குமார். இவரது, விடா முயற்சியால் வெள்ளத்தில் சிக்கிப் போராடிய 26 பேரை பத்திரமாக மீட்டுள்ளார். இவரது, துணிச்சலான சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக, கேப்டன் ராஜ்குமாரின் சேவையைப் பாராட்டி ஷ்வரியா சக்ரா (Shaurya Chakra) விருது வழங்கப்பட்டுள்ளது.  Trending Articles

Sponsored