`மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்!’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சிSponsoredதொலைக்காட்சி பேட்டியின்போது வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்களை உடனடியாக அனுப்பக் கோரி அழுதது குறித்து செங்காணூர் தொகுதி எம்.எல்.ஏ சாஜி செரியன் விளக்கமளித்திருக்கிறார். 

Photo Credit: ANI

Sponsored


கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவால், அம்மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த 9ம் தேதி முதல் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் தனித்தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. நிலச்சரிவு, வெள்ளம் என கனமழையின் கடும் பாதிப்புகளில் சிக்கி கேரள மக்கள் தவித்து வருகிறார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு நாடு முழுவதுமிருந்து பல்வேறு வகையில் உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், கடற்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோருடன் கேரள அரசியல் கட்சியினரும் கைகோத்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மனோரமா தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த செங்காணூர் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சாஜி செரியன், பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்தநிலையில், அழுதார். இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

Sponsored


அவர் கூறுகையில், ``வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க பிரதமரிடம் ஹெலிகாப்டர்களை அனுப்பச் சொல்லுங்கள். இதை உடனடியாகச் செய்யாவிட்டால் 50,000 பேர் உயிரிழந்துவிடுவார்கள். கடற்படை உதவியைக் கடந்த நான்கு நாள்களாகக் கோரி வருகிறோம். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்பதே ஒரே வழி’’ என்று கூறியிருந்தார்.   
இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சாஜி செரியன்,``மலைப்பாங்கான தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். படகுகளில் அவர்களை மீட்க முடியாது. அதனால்தான் நான் அவ்வாறு தொலைக்காட்சிப் பேட்டியில் பேச வேண்டியதாயிற்று. கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் 200 பேரை இன்று மீட்டிருக்கிறார்கள். முந்தைய நாள்களை விட இன்றைய சூழல் நன்றாக இருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
 Trending Articles

Sponsored