காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலைSponsoredஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீறி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேரைப் பாதுகாப்பு படையினர் சுட்டுவீழ்த்தினர். 

தீவிரவாதிகளின் ஊடுருவும் முயற்சியைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் முறியடித்துவருகின்றனர். இதில், பல நேரங்களில் தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர். சில நேரங்களில் பாதுகாப்பு படையினரும் வீர மரணம் அடைகின்றனர். இந்நிலையில், குப்துவரா மாவட்டத்தில் உள்ள தங்கார் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவர்களுக்குத் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையறிந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். 

Sponsored


அப்போது, எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற மூன்று தீவிரவாதிகளை கடும் போராட்டத்துக்குப் பின்னர் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும், சிலர் ஊடுறுவியிக்கலாம் எனச் சந்தேகிப்பதால், தொடர்ந்து தேடுதல் பணியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

Sponsored
Trending Articles

Sponsored