கேரளாவுக்கு கரம் நீட்டும் அண்டை மாநிலங்கள்... குவிகிறது வெள்ள நிவாரண நிதி!Sponsoredவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் நோக்கில் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

தென்மேற்கு பருவமழையால் பெய்த கனமழை காரணமாகக் கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் இரவு-பகல் பாராமல் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

Sponsored


இந்நிலையில், கேரள மக்களின் துயர் துடைக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பட்டியல் இதோ. 

Sponsored


ஆந்திரா - ரூ.10 கோடி 
புதுடெல்லி  - ரூ.10 கோடி 
குஜராத் - ரூ.10 கோடி 
ஹரியானா - ரூ.10 கோடி 
ஜார்கண்ட் - ரூ.5 கோடி 
மகாராஷ்ட்ரா - ரூ.20 கோடி 
கர்நாடகா - ரூ.10 கோடி 
ஒடிசா - ரூ.5 கோடி 
பஞ்சாப் - ரூ.10 கோடி 
புதுச்சேரி - ரூ.2 கோடி 
தமிழ்நாடு - ரூ.10கோடி 
தெலங்கானா - ரூ.25 கோடி 
உத்தரப்பிரதேசம் - ரூ.15 கோடி 

இதில், அதிகபட்ச நிதியுதவியைத் தெலங்கானா மாநிலம் தந்துள்ளது. குறைந்தபட்ச நிதியுதவி அளித்த பட்டியலில் ஒடிசா இடம்பெற்றிருக்கிறது. மேலும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன. சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர்.Trending Articles

Sponsored