முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு!Sponsoredமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியின் ஒரு பகுதி, ஹரித்துவாரிலுள்ள கங்கை நதியில் கரைக்கப்பட்டது. 

இந்திய முன்னாள் பிரதமரும் பா.ஜ.க-வின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் ஆகஸ்ட் 17-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை நாடு முழுவதுமுள்ள ஆறுகளில் கரைப்பதற்கு பா.ஜ.க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், முதலாவதாக வாஜ்பாய் அஸ்தியின் ஒரு பகுதி, ஹரித்துவாரிலுள்ள கங்கை நதியில் கரைக்கப்பட்டது. அவருடைய அஸ்தி உத்தரகாண்ட் மாநிலத்தின் பன்னா லால் பகுதியிலிருந்து காரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கங்கை நதியின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Sponsored


Sponsored


இந்த நிகழ்வில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்களின் முதல்வர்கள், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அஸ்தியை வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா, கங்கை நதியில் கரைத்தார். வாஜ்பாயின் அஸ்தியை தமிழ்நாட்டிலும் ஆறு இடத்தில் கரைப்பதற்கும் பா.ஜ.க தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.Trending Articles

Sponsored