பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா கேரளா மழை வெள்ளம்?Sponsoredகேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள சில நிறுவனப்பங்குகள்  பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து  மாவட்டங்களும்  மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும்  வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி காபி, தேயிலை, ஏலக்காய், ரப்பர்  பயிரிட்டுள்ள விவசாயிகள் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள பல நிறுவனங்கள் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் கனமழை வெள்ளத்தால்  பாதிப்பைச் சந்திப்பதால், பங்குச்சந்தையில் இந்த நிறுவனப் பங்குகளின்  விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும், ஃபெடரல், சவுத் இந்தியன் ஆகிய வங்கிகள், அவற்றின் வர்த்தகத்தில் 40-45 சதவிகிதத்தை  கேரளாவில்தான் கொண்டுள்ளன. 

இதுதவிர, முத்துட் ஃபைனான்ஸ் நிறுவனம் கேரளாவில் மட்டும் 650 கிளைகளைக் கொண்டுள்ளது. மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனமும்  15 சதவிகித கிளைகளை கேரளாவில்தான் கொண்டுள்ளது.  டயர் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கச்சாபொருளான ரப்பர்  கிடைக்காமல் கடும் பாதிப்புக்குள்ளாக இருக்கின்றன. ராம்கோ சிமென்ட் நிறுவனமும் கேரளாவில் மிகப்பெரிய  ஆலையைக்  கொண்டுள்ளது. 

Sponsored


நடப்பு 2018-19 ம் நிதியாண்டில்  கேரளாவில் ரப்பர் உற்பத்தியும் 15 சதவிகிதம் சரி்நது 6,00,000 டன்னாக குறையும் எனத் தெரிகிறது.  இந்தப்  பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் விலை கண்டிப்பாக  குறைய வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும்  கேரள மழை வெள்ளம் பங்குச்சந்தைகளில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Sponsored
Trending Articles

Sponsored