தனியார் பங்கு முதலீடு 1,151 கோடி டாலராக உயர்வு!Sponsoredநடப்பாண்டில்  ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலத்தில் தனியார் பங்கு முதலீடு 1,151 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் தனியார் பங்கு முதலீடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் குறிப்பாக சென்ற ஜூலை மாதத்தில் மொத்தம் 81 தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்களின் வாயிலாக 210 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான  காலத்தில் 1,151 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது இது 20 சதவிகிதம் அதிகமாகும். நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களை அதிகளவில் மேற்கொள்ள காட்டிய ஆர்வத்தால், தனியார் பங்கு முதலீடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Sponsored


கடந்த  ஜூலை மாதத்தில்  தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் எண்ணிக்கை அடிப்படையில் 37 சதவிகித வளர்ச்சியையும், மதிப்பின் அடிப்படையில் 72 சதவிகித வளர்ச்சியையும் எட்டியுள்ளன. குறிப்பாக பெரிய அளவிலான தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்கள், ரியல் எஸ்டேட், இணைய வர்த்தக சந்தை, மருந்து, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் பயோடெக் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் மாதங்களிலும் தனியார் பங்கு முதலீடுகள்  அதிகளவில் மேற்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக  கிராண்ட் தோர்ன்டன் என்ற ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored