``உங்கள் செருப்புகளை கழற்றுங்கள்!'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய மீனவர்Sponsoredலப்புரைத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (வயது 32) இப்போது கடற்படை வீரர்களுக்கு இணையாக கொண்டாடப்படும் மீனவர் ஆகியுள்ளார். கேரள மழை வெள்ளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜெய்ஷால் தன் முதுகை படிக்கட்டாக்கிக்கொள்ள பெண்கள் அதில் ஏறி படகில் அமர்ந்த சம்பவம் இந்தியா முழுவதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது. மலப்புரம் மாவட்டம் வெங்காரா பகுதியில் நடந்த மீட்புப்பணியின் போதுதான் ஜெய்ஷால் இவ்வாறு செயல்பட்டு பெண்களை மீட்டார். ஜெய்ஷால் குழுவினர் 17 குடும்பத்தைச் சேர்ந்த 250 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். இதில், 29 நாள் குழந்தையும் ஒன்று. 10 சடலங்களையும் ஜெய்ஷால் குழுவினர் மீட்டுள்ளனர். 

படகில் ஏற முடியாமல் பெண்கள் திணறியபோது, ஜெய்ஷால் குனிந்துகொள்ள அதில் பெண்கள் செருப்புக் காலுடன் ஏறத் தொடங்கினர். அருகிலிருந்த நண்பர் , 'இவர் மனிதர், உங்கள் செருப்புகளை கழற்றுங்கள்!'' என்று சத்தம் போட்டுள்ளார். ஆனால், ஜெய்ஷால், சத்தம் போட்ட நண்பரை கடிந்துகொண்டார். 'இந்தச் சமயத்தில் இதுவெல்லாம் ஒரு பிரச்னையா' என்று சத்தமிட்ட தன் நண்பரை அமைதிப்படுத்தினார் ஜெய்ஷால்.

Sponsored


Sponsored


கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் Trauma care என்ற அமைப்பில் சேர்ந்து தன்னார்வத் தொண்டராக ஜெய்ஷால் பணியாற்றுகிறார். 2002-ம் ஆண்டு முதல் இப்போது வரை பல்வேறு மீட்புப்பணிகளில் ஜெய்ஷால் ஈடுபட்டுள்ளார். கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர் இவர். 

மீட்புப்பணி குறித்து ஜெய்ஷால் கூறுகையில், ``தேசிய பேரிடர் குழுவினர் செல்ல முடியாத இடங்களுக்குக்கூட சென்று எங்களால் முடிந்த வரை மக்கள் பணியாற்றினோம். வெள்ளத்தில் பல இடங்களில் பாம்புகளைக் கடந்து சென்றோம். எங்கள் குழுவில் உள்ள இருவரை தேள் கடித்தன. ஆனாலும் மீட்புப்பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார்.Trending Articles

Sponsored