பேச்சுவார்த்தைக்குத் தயார்! - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்Sponsored'தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட, இரு நாடுகளும் உழைக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

 

பாகிஸ்தானின் 22- வது பிரதமராக இம்ரான்கான், கடந்த சனிக்கிழமை பதவியேற்றார். தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் வெற்றிபெற்ற பிறகு பேசிய இம்ரான் கான், 'இந்தியாவுடன் நல்லுறவை மேற்கொள்ள விரும்புகிறேன். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒரு அடி எடுத்துவைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்துவைக்க தயாராக உள்ளது' என்று பேசியிருந்தார். இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி இம்ரான் கானுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'பாகிஸ்தானுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறோம். இதுதொடர்பாக ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக உள்ளது. தெற்கு ஆசியப் பகுதிகளில் அமைதி நிலவுவதற்கு இரு நாடுகளும் கடுமையாக உழைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பிரதமர் தேர்தலில் இம்ரான் கான், வெற்றி பெற்ற பின்பு, மோடி தொலைபேசி மூலம் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து, அமைதி மற்றும் வளர்ச்சி குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored