சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் புதிய உச்சம் தொட்டன! 20.08.2018Sponsoredசர்வதேச சந்தைகளில் நிலவிய பாசிட்டிவான போக்கையடுத்து இந்திய பங்குச் சந்தையில் இன்று மிகவும் உற்சாகமான நிலையில் வர்த்தகம் தொடங்கியதால், சந்தையின் முக்கிய குறியீடுகளாகச் சென்செக்ஸும் நிஃப்டியும் புதிய உச்சங்களைத் தொட்டன.

மும்பை சந்தையின் சென்செக்ஸ் 38,340.69 என்று ஒரு புதிய உயரத்தைத் தொட்டபின், 330.87 புள்ளிகள் அதாவது 0.87 சதவிகித லாபத்துடன் 38,278.75 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11,565.30 என்ற புதிய உச்சத்தை அடைந்தபின், 11,551.75 என்ற நிலையில், 81 புள்ளிகள் அதாவது 0.71 சதவிகித லாபத்துடன் முடிந்தது.

Sponsored


இந்த வாரம் நடக்கவிருக்கும் அமெரிக்க-சீன நாடுகளுக்கிடையேயான வர்த்தக பேச்சு வார்த்தை, இவ்விரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பூசலைத் தணிக்க உதவும் என்ற நம்பிக்கையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இன்று ஓரளவு உற்சாகமான மனநிலை இருந்தது.

Sponsored


துருக்கியின் கரன்சியான லிராவின் தரம் சற்று டௌன்க்ரேட் செய்யப்பட்டதால் அந்தக் கரன்சி மதிப்பு குறைந்ததாலும் துருக்கியில் அமெரிக்க தூதரகம் முன் நடந்த துப்பாக்கி சூடு காரணத்தினாலும் சந்தைகளில் ஒரு பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இருக்கவில்லை.

டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சற்று கூடியதும் சந்தையின் ஏறுமுகத்துக்கு உதவியது. 

மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும், இந்த ஆண்டு அது 7.5 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என்றும் அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விர்மானி கூறியிருப்பதும் சந்தையின் உற்சாகத்துக்கு ஒரு காரணம்.

லார்சென் & டூப்ரோ பங்குகள் BUY-BACK பற்றி முடிவெடுப்பதற்காக நிறுவனத்தின் நிர்வாகிகள் குழு ஆகஸ்ட் 23-ம் தேதி கூடும் என்று அறிவித்தது அப்பங்கின் விலையேற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாகி சந்தையின் உயர்வுக்கும் உதவியது. 

விலை அதிகரித்த பங்குகள் :

லார்சென் & டூப்ரோ 6.75%
டாடா மோட்டார்ஸ் 4.6%
ஓ .என்.ஜி.சி  3.5%
டாடா ஸ்டீல் 3.3%
ஹிண்டால்கோ 3.2%
ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் 18.4%
வெல்ஸ்பன் கார்ப் 11.4%
ஜிண்டால் சா 7.3%
டிவி'ஸ் லேப் 6.3% 

விலை சரிந்த பங்குகள் :

இன்போசிஸ்  3.2%
கெயில் இந்தியா 2.2%
டைட்டன் 2.1%
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் 1.45%
லூப்பின் 1.35%
ஜி.ஈ. ஷிப்பிங் 5.9%
பெடரல் பேங்க் 5.6%
கிராபைட் இந்தியா 5%
TTK பிரெஸ்டிஜ் 4.2%
இன்று மும்பை பங்குச் சந்தையில் 1473 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1271 பங்குகள் சரிந்தன. 204 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலுருந்து மாற்றமில்லாமல் முடிந்தன.Trending Articles

Sponsored