ஷிஃப்ட் முறையில் வேலை செய்த கைதிகள் - சிறையிலிருந்து அனுப்பப்பட்ட 50,000 சப்பாத்திகள்!Sponsoredகேரள வெள்ளத்தில் சிக்கி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காகத் திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் கைதிகள் 50,000 சப்பாத்திகள் செய்து அனுப்பியுள்ளனர். 

கேரளாவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் மொத்த மாநிலமும் திணறிப்போயுள்ளது. 10 நாள்களுக்கும் மேலாக விடாமல் பெய்த மழை சற்று தணிந்த நிலையில், அங்கு மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் அனைத்து மூலைமுடுக்கிலிருந்தும் கேரளாவை நோக்கி நிவாரணப் பொருள்களும் நிதியுதவிகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்தப் பேரிடர் கேரளாவில் ஒரு மனிதாபிமானத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மக்களுக்காகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.

Sponsored


இந்நிலையில், திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் இருக்கும் கைதிகள் கேரள மக்களுக்காக 40,000 முதல் 50,000 சப்பாத்திகள் செய்து முகாம்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட கைதிகள் இணைந்து ஷிஃப்ட் முறையில் வேலை செய்து சப்பாத்திகள் மற்றும் குருமா ஆகியவற்றைத் தயாரித்து மாவட்ட அதிகாரிகள் மூலம் முகாம்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். ``வெள்ளத்தில் சிக்கி வீட்டு மாடியில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காகக் குறிப்பாக சிறையில் சப்பாத்திகள் தயாரிக்கப்பட்டன” என மூத்த சிறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored