`தேவாலய வளாகத்தில் புதைக்கப்பட்ட சுப்பிரமணியன்!’ - மனித நேயத்தால் மீளும் கேரளாSponsoredகேரளாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த இந்து மதத்தை சேர்ந்தவரை புதைக்க தேவாலயத்தில் இடம் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

photo credit : manoramaonline

Sponsored


கடந்த இரு வாரக் காலமாகத் தீவிரமாகப் பெய்த மழை சற்று குறைந்துள்ளதால் கேரள மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர். இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பல்வேறு நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளிலிருந்தும் தங்களால் இயன்ற உதவியைச் செய்துவருகின்றனர். இயற்கையின் இந்தக் கோரத்தாண்டவம் சாதி மத இன, அரசியல் பாகுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைத்துள்ளது. அதற்கு உதாரணமாக இடுக்கி மாவட்டத்தில் ஓர் உணர்ச்சிபூர்வமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Sponsored


கேரளாவில் பெய்த மழைக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடம் இடுக்கி மாவட்டம்தான். மழை ஆரம்பமானது முதல் இடுக்கி அணை திறக்கப்பட்டது வரை அங்கு அதிகமான பாதிப்புகள் உண்டானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே உள்ள சித்திராபுரம்  மக்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால் அருகில் பள்ளிவாசல் நகரில் அரசுப்பள்ளி ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். நிவாரண முகாமில் தங்கியிருந்தபோது, இரு நாள்களுக்கு முன்பு சுப்பிரமணியன் என்பவர் உடல்நலக்குறைவால் முகாமிலேயே இறந்துள்ளார். 

ஊர் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அவரைப் புதைக்க இடம்கிடைக்காமல் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் இருந்துள்ளனர். அவரது சொந்த இடம் நான்கு ஏக்கரும் நீரில் மூழ்கியிருப்பதால் செய்வதறியாமல் திகைத்து இருந்தபோது, இந்த விஷயத்தை அறிந்த அந்த ஊரில் உள்ள தேவாலயப் பாதிரியார் ஷிண்டே தாமஸ் உடனடியாக அவர்களுக்கு உதவியுள்ளார். தேவாலய வளாகத்திலேயே சுப்பிரமணியன் உடலைப் புதைக்க அனுமதித்த பாதிரியார் தாமஸ், சுப்பிரமணியனின் மதமான இந்து மதப்படியும் கிறிஸ்துவ மதப்படியும் இறுதிச் சடங்குகளும் செய்ய அனுமதித்து அவரும் அதில் பங்கேற்றுள்ளார். இந்தச் சம்பவம் அங்குள்ளவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Trending Articles

Sponsored