Sponsored
சத்தீஸ்கர் தலைநகர் புதிய ராய்ப்பூரை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவைப் போற்றும்வகையில், 'அடல்நகர்' என்று மாற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய், உடல்நலக் குறைவால் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பின்னர், அவரது அஸ்தி கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் கரைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, அவரது அஸ்தியின் ஒரு பகுதி, ஹரித்துவாரிலுள்ள கங்கை நதியில் கரைக்கப்பட்டது.
Sponsored
இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் அவரை கௌரவித்துவருகின்றன. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை வாஜ்பாயைக் கௌரவப்படுத்தும் வகையில், 'அடல் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன்சிங் தெரிவித்திருக்கிறார். மேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
Sponsored
அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது. மேலும், ரூ.600 கோடி மதிப்பில் போபாலில் உருவாகிவரும் உலகளாவிய திறன் மேம்பாட்டுப் பூங்காவுக்கு (The Global Skill park) வாஜ்பாய் பெயர் சூட்ட வேண்டும் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதேபோல, ஹிமாச்சலப்பிரதேசத்தின் ஷிம்லாவில் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Trending Articles
இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்
`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்!'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
Sponsored