ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்!Sponsoredஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநராக இருந்த என்.என். வோரா நீக்கப்பட்டு, பீகார் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக், அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் என்.என்.வோரா ஆளுநராகப் பதவி வகித்துவந்தார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் வோராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அடுத்து, ஜூன் மாதம் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து, அந்த மாநில ஆளுநர் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, காஷ்மீர் உள்ளிட்ட பல மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.  

Sponsored


Sponsored


பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க முன்னாள் எம்.பி லால் ஜி டாண்டன் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த கங்கா பிரசாத், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுரா ஆளுநராக இருந்த டதாகடா ராய், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா ஆளுநராக இருந்த காப்தன் சிங் சோலங்கி திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா, உத்தரகான்ட் ஆளுநராக பேபி ராணி மௌரியா நியமிக்கப்பட்டுள்ளனர். Trending Articles

Sponsored