லக்னோவில் கேக் வெட்டி பக்ரீத் கொண்டாட்டம்!Sponsoredலக்னோவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் ஆடு படம் வரையப்பட்ட கேக்கை வெட்டி பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஈகைத் திருவிழாவான பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு முஸ்லிம்கள் விலங்குகளை தியாகம் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இதற்கு மாறாக உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் ஆடு படம் வரையப்பட்ட கேக்கை வெட்டி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர். லக்னோவில் உள்ள ஒரு பேக்கரிக்குப் பொருள்களை வாங்க வந்த வாடிக்கையாளர்,  இந்தப் பண்டிகையை ஆடுகள் பலியிட்டு கொண்டாடுவதைத் தவிர்த்து கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் அடிப்படையில், முஸ்லிம்கள் கேக் வெட்டி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டும் இதேபோன்று முஸ்லிம்கள் கேக் வெட்டி  இந்தப்  பண்டிகையைக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored