`இது எங்கள் பூமி...' - கோயில் ஸ்தலங்களைச் சுத்தம் செய்யக் கைகோக்கும் இஸ்லாமிய இளைஞர்கள்Sponsoredகேரளாவில் தென்மேற்குப் பருவமழை ரூத்ர தாண்டவம் ஆடிவிட்டது. மக்கள் மனதில் நீங்காத துயரமாக, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இருந்தபோதிலும், சமத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு நெகிழ்ச்சியான நிகழ்வுகளை இந்த இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்துத்தான் வருகிறது. 

Photo Credit -@jasirmckbl

Sponsored


கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய பருவ மழை தீவிரம் அடைந்து, வெள்ளக்காடாகக் கேரளாவை புரட்டிப் போட்டுவிட்டது. 14 மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால், பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முப்படைகளுடன், மீனவர்கள், இளைஞர்கள் எனப் பல தொண்டு நிறுவனங்களும் கைகோத்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதனிடையில், பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொள்படம், தென்கரா, மன்னர்க்கட் ஆகிய பகுதிகளில் உள்ள சமஸ்த கேரளா சன்னி ஃபெடரெட்டின் (SKSSF) அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

Sponsored


அப்போது, அப்பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் சுத்தம் செய்ய முடிவுசெய்தனர். அவர்களது விருப்பத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல், கோயில் நிர்வாகம் அவர்களை அன்போடு தூய்மைப் பணிகளில் ஈடுபட அனுமதித்துள்ளது. 

`இது எங்கள் பூமி. பாலக்காடு மற்றும் பட்டாம்பி ஆகிய பகுதிகளில் மீட்புப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது, கொள்படம் பகுதியில் உள்ள கோயில் சகதி சேறாக உள்ளது. அங்கு சுத்தம் செய்ய ஆட்கள் வேண்டும் என்று கேள்விப்பட்டோம். அதையடுத்து, கோயில் நிர்வாகத்திடம் அணுகி, அவர்களது விருப்பத்தைக் கேட்டறிந்தோம். அதனையடுத்து, நிர்வாகத்தின் அனுமதியுடன் 17 பேர் கொண்ட குழு தூய்மைப் பணியை வெற்றிகரமாகச் செய்துமுடித்தோம்' என்கிறார் அக்குழுவைச் சேர்ந்த சபீர். இதேபோல், தென்கரா பகுதியில் உள்ள மகா விஷ்ணு கோயிலையும் இஸ்லாமிய இளைஞர்கள் கைகோத்து சுத்தம் செய்துள்ளனர். Trending Articles

Sponsored