அறிவார்ந்த மாபெரும் சிந்தனையாளர் குல்தீப் நய்யார் காலமானார்!Sponsoredஎழுத்தாளரும் பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை டெல்லி மருத்துவமனையில் காலமானார். 

பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் கடந்த 1923-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதியில் பிறந்த குல்தீப், பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார். அதன்பின், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் எனத் தன்னை பன்முகத்தன்மையுடன் அடையாளப்படுத்திக் கொண்டார். `எல்லைகளுக்கு இடையே', `தூரத்து உறவினர்கள்', `நேருவுக்குப் பிறகு இந்தியா', `ஸ்கூப்' உள்ளிட்ட புகழ்பெற்ற 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 

Sponsored


இந்த நிலையில், உடல்நலக் குறைவால் தனது 95 வயதில் குல்தீப் நய்யார் இன்று அதிகாலை டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது, மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், `குல்தீப் நய்யார் அறிவார்ந்த மாபெரும் சிந்தனையாளராகத் திகழ்ந்தவர். பல சகாப்தங்களாகவும் வெளிப்படையாகவும் யாருக்கும் பயப்படாதவராகவும் தனது பணியைச் சிறப்பாக செய்தவர். எமர்ஜென்சிக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். இவரது மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார். 

Sponsored


எமர்ஜென்சி காலத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் குல்தீப் நய்யாரும் ஒருவர். இவரது மறைவுக்கு, பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.Trending Articles

Sponsored