`பெண்கள் மீதான பார்வையை மாற்றுங்கள்!' - ராகுல் அட்வைஸ்Sponsoredபெண்கள் மீதான பார்வையை இந்திய ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். ஹேம்பர்க்கில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல், ``பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என்ற கூற்றை நான் மறுக்கிறேன். ஆனால், உண்மையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகளவில் நடக்கின்றன. கண்களுக்குத் தெரிந்தும், வீதிகளிலும் மற்றும் தெரியாமல் பல வன்முறைகள் நடைபெறுகின்றன. வீடுகளிலும் இவை நடக்கின்றன. இந்திய ஆண்கள் எப்படி இந்தியப் பெண்களை பார்க்கிறார்கள் என்பது கலாசாரம் குறித்த பிரச்னை என நினைக்கிறேன். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நிறைய உழைக்க வேண்டியுள்ளது. இது ஒரு முக்கியமான விஷயம். இந்தியர்கள் தங்களது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். பெரிய முயற்சிகளின் மூலமே இது சாத்தியமாகும். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் உழைக்க வேண்டும்'' என்றார்.

Sponsored


மேலும் பேசிய ராகுல், அரசியல் கட்சிகளிலும் பெரிய அளவில் பெண்கள் இல்லை. நாடாளுமன்றத்திலும் குறைவான எண்ணிக்கையிலே பெண் பிரதிநிதிகள் உள்ளனர். நீங்கள் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றால் அவர்களின் குரலை நிர்வாகத்தில் கேட்க முடியாது. பெண்களை நிர்வாகத்துக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுள்ளேன். கீழ்மட்டத்தில் நடத்தப்படும் தேர்தல்களில் இருந்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களை சமமாகப் பார்க்கத் தொடங்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். பெண்களின் ஈடுபாடு இல்லாமல் வெற்றிகரமான இந்தியாவை உங்களால் உருவாக்க முடியாது'' என்று கூறினார்.

Sponsored
Trending Articles

Sponsored