கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்தார் ராகவா லாரன்ஸ்! Sponsoredவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிதியுதவி மற்றும் பொருளுதவி சென்று கொண்டிருக்கிறது. சுமார் 1,500 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு அன்றாடம் பயன்படும் பொருள்கள், ஆடைகள் மற்றும் உணவுப் பொருள்களைத் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளிலிருந்து சென்றுகொண்டிருக்கிறது. இதையொட்டி பல்வேறு சினிமா நபர்களும் உதவி செய்து வருகின்றனர். 

இதுவரை, கமல் 25 லட்சம், தனுஷ் 15 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், நயன்தாரா 10 லட்சம் ரூபாயை நிதியுதவியாகக் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். வருகிற சனிக்கிழமையன்று கேரளா முதல்வர் பிரனாயி விஜயனை நேரில் சந்தித்து இத்தொகையை வழங்க இருக்கிறார் லாரன்ஸ். இதுகுறித்து திரையுலகத்தினர் பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored