கோயில் வளாகத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை! - பக்ரீத் அன்று கேரளாவில் நடந்த மனிதநேயம்Sponsoredகேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோயில் வளாகத்தில், நேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகை நடத்தியுள்ளனர். 

PhotoCredits : Twitter/@MiniShivaMenon

Sponsored


கேரள மாநிலத்தில் பெய்த கனமழை, மாநிலம் முழுவதையும் ஸ்தம்பிக்கவைத்துவிட்டது. கடந்த இரண்டு நாள்களாக கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளம் சற்று வடிந்த நிலையில், பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றுவருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் வெள்ள நீர் இன்னும் வெளியேறவில்லை. அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இன்னும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவின் வெள்ளம், அம்மாநிலத்தில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகம் வளர்த்துள்ளது. 

Sponsored


இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை, நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கேரளாவைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தால், அங்குள்ள மக்கள் ஓணம், பக்ரீத் போன்ற பண்டிகைகளைக் கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருந்தனர். இந்நிலையில், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எரவத்தூர் என்ற கிராமத்தில் உள்ள மசூதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும், முகாம்களில் பக்ரீத் தொழுகை நடத்த முடியாமலும் அப்பகுதி இஸ்லாமியர்கள் தவித்துள்ளனர். அதன்பின் புரப்புல்லிகாவு ரத்னேஷ்வரி கோயில் நிர்வாகிகள் இஸ்லாமியர்களுக்குக் கோயில் வளாகத்தில் உள்ள இடத்தில் அனுமதி அளித்துள்ளனர். பின்னர், சுமார் 200 இஸ்லாமியர்கள் கோயில் வளாகத்தில் தொழுகை நடத்தியுள்ளனர். 

இதுகுறித்துப் பேசிய மஸ்ஜித் மஹாலு கமிட்டியின் தலைவர் காலித், “மழை நின்றதும் இரண்டு நாள்களில் வெள்ளம் வடிந்துவிடும். அதனால், பக்ரீத் தொழுகையை மசூதியில் நடத்தலாம் என நினைத்திருந்தோம். ஆனால், இரண்டு நாள்களுக்குப் பின்னரும் வெள்ளம் வடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கோயில் நிர்வாகத்தினரிடம் இடம் கேட்டோம். அவர்கள் உடனடியாகத் தொழுகைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தனர். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் அங்கு இரண்டு மணிநேரமாக பக்ரீத் தொழுகை நடத்தினோம்” என்று கூறியுள்ளார்.Trending Articles

Sponsored