அடித்துத் துன்புறுத்திய மனைவி - கணவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கிய நீதிபதிSponsoredமனைவியால் தாக்கப்பட்ட கணவருக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் சர்மா. மாற்றுத்திறனாளியான இவர், அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில், தன் மனைவிக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார். `90 சதவிகிதம் மாற்றுத்திறனாளியான என்னை, என் மனைவி அடித்துத் துன்புறுத்துகிறார்' எனக் குறிப்பிட்டு மனு அளித்துள்ளார். 

Sponsored


இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சர்மாவின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சர்மாவின் வழக்கறிஞரான ஆதித்யா அகர்வால், மாற்றுத்திறனாளிகள் ஓட்டக்கூடிய, சர்மாவின் மூன்று சக்கர வாகனத்தை அவரின் மனைவி உடைத்த புகைப்படத்தை ஆதாரமாக நீதிபதிகளிடம் சமர்ப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் சர்மாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட்டனர். மேலும், அவசரக்கால உதவிக்காக இரண்டு மொபைல் எண்களைப் போலீஸாரிடம் கொடுக்க வேண்டும் என சர்மாவுக்கு உத்தரவிட்டனர். 

Sponsored


இதனிடையில், எந்தக் காரணத்தைக் கொண்டும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது எனச் சர்மாவின் மனைவிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.Trending Articles

Sponsored