`சாத்தானின் ஒரு கண்' - தற்கொலை செய்துகொண்ட 12-ம் வகுப்பு மாணவன் Sponsoredகொல்கத்தாவில் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் அல்போன்சஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், குர்செயங். இவர், செயின்ட் மேரி மலைப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, போலீஸார் கூறுகையில், ``மலைப்பகுயில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற புகார், கடந்த 20-ம் தேதி காலையில் பெறப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். சிறுவன் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் உள்ள சுவர் ஒன்றில் விசித்திரமான சின்னங்கள் மற்றும் இல்லுமினாட்டி, தூக்கிலிடப்பட்ட மனிதன், சாத்தானின் ஒரு கண் போன்ற வார்த்தைகளைக் கண்டோம். இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார். 

Sponsored


சிறுவன் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள், இணையதளங்களில் உலா வரும் மோமோ சேலஞ்ச் போன்ற விளையாட்டுகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது என அருகில் வசிப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 'மிகச் சிறந்த மாணவனை இழந்துவிட்டோம்' என வருத்தப்பட்ட குர்செயங்கின் ஆசிரியர், 'இணையதளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்காணிப்பது மிகவும் அவசியம்' என்று அறிவுறுத்தியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored