தண்ணீரில் மூழ்கிய பள்ளிப் பேருந்து - தப்பிய 70 மாணவர்கள்..!Sponsoredராஜஸ்தானில் பெய்த கன மழையால், தேங்கிய தண்ணீரில் பள்ளிப்பேருந்து ஒன்று சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்டது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2 நாள்களாக மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகச் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. மேலும், பல இடங்களில் மழை நீர் தேங்கியது. டவுச (Dausa) நகரில் பெய்த மழையால், அப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில், சுரங்கப் பாதை வழியில் சென்ற பள்ளி வாகனம் ஒன்று தண்ணீரில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து,  பேருந்தில் இருந்த சில சிறுவர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உடனடியாகப் பேருந்தின் மேற்கூரை மீது ஏறித் தப்பிக்க முயன்றுள்ளனர். 

Sponsored


இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிலர் சிறுவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். பாலத்தின் மீது ஏறிய அவர்கள் கயிறுகளைக் கொண்டு சிறுவர்களை மீட்க முயற்சி செய்தனர். மேலும், சிலர் தண்ணீரில் நீந்திவந்து மாணவர்களை மீட்டெடுத்தனர். சுரங்கப் பாதையில் பேருந்து சிக்கிக்கொண்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored