`ஆமாம். காவலரை மிரட்டியது என்னுடைய மச்சான்தான்!' - ம.பி முதல்வர் பேட்டிSponsoredபோபாலில் போக்குவரத்து விதிகளை மீறி கார் ஓட்டி வந்த நபர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து போக்குவரத்து காவலரை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் விதான் சபா அருகே போக்குவரத்துக் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். காரில் உள்ளவர்களிடம் அவர்கள் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களும் ஓர் ஆணும், ‘ நான் யார் தெரியுமா. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மச்சான். என் மனைவி அவரின் தங்கை. எங்களிடமே ஆவணங்களைக் கேட்கிறீர்களா’ என ஆவேசத்துடன் பேசியபடியே காவலர்களை மிரட்டியுள்ளனர். இவர்கள் மிரட்டுவதைத் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்தார் காவலர் ஒருவர். இதையடுத்து, அந்த இரண்டு பெண்களில் ஒருவர், யாருக்கோ போன் செய்து  `இந்தா பேசு.. சி.எம் சொந்தக்காரங்ககிட்டயே டாகுமெண்ட்ஸ் கேட்பாயா...உயர் அதிகாரி பேசுகிறார்.. இந்தா பேசு..’ என்று காவலரின் முகத்துக்கு நேராக போனை எடுத்து நீட்டியுள்ளார். 

இவர்கள் மூவரையும் பொறுமையாகக் கையாண்ட அந்தக் காவலர், தன் செல்போனில் அனைத்தையும் பதிவு செய்துகொண்டார். கடைசிவரையில் அவர்களும் ஆவணங்களைக் காட்டவில்லை. அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்ததற்கான அபராதத்தையும் செலுத்தவில்லை. காவலர்களுடன் மோதல் வலுத்ததால், அங்கு மக்கள் கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. இதனால், வாகனத்தின் எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு அவர்களைக் காவலர்கள் அனுப்பிவிட்டனர். 

இந்தச் சம்பவம் குறித்து ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசிய ஊடகத்தினர், ``போக்குவரத்துக் காவலரை மிரட்டிய அந்த நபர் உங்கள் மச்சானா'' என்று கேட்டுள்ளனர். அதற்குப் பதில் அளித்த அவர், ‘ எனக்குக் கோடிக்கணக்கில் சகோதரிகள் உள்ளனர். அனைத்துப் பெண்களுமே என் சகோதரிகள்தான். எனவே, அவர் எனக்கு மச்சான்தான். யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என மழுப்பலான பதிலைக் கொடுத்திருக்கிறார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored