பல்கலைக்கழக வளாகங்களுக்குள் ஜங்க் உணவு வகைகளுக்குத் தடை! யூ.ஜி.சி அறிவுறுத்தல்Sponsored'நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழக வளாகங்களுக்குள் ஜங்க் (junk) உணவுகளைத் தடைசெய்யவேண்டும்' என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது. 

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி-யிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பல்கலைக்கழகங்களில் ஜங்க் உணவுகளைத் தடைசெய்ய வேண்டும். இளம் மாணவர்களின் உடல் பருமனைக் குறைக்கும் வகையில் ஆரோக்கியமான உணவுகள் வழங்க வேண்டும். அதற்கான புதிய தரத்தைப் பின்பற்ற வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2016-ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்பை தற்போது நினைவுபடுத்தும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த யூ.ஜி.சி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின், 'இந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆனால், கல்லூரிகள் இதை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஜங்க் உணவுகள் உண்பதால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த உதவ வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored