கேரள வெள்ள நிவாரண நிதிக்காக `ஆஷ்வாஸ்’ லாட்டரி விற்க முடிவு!Sponsoredவெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான கேரளாவில் முதல்வரின் நிவாரண நிதி உதவித் திட்டத்துக்கு நிதி திரட்டும் வகையில் ‘ஆஷ்வாஸ்’ லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்ததால் 370-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் ஏராளமான கட்டடங்கள் இடிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் வடியத் தொடங்கி இருக்கிறது. அதனால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். 

Sponsored


இந்த வெள்ளத்தின் காரணமாகக் கேரளாவுக்கு 26,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து நிவாரண உதவிகள் கேரளாவுக்கு குவிந்த வண்ணம் இருந்தபோதிலும், அந்த மாநில மக்கள் இந்தக் கொடூர வெள்ளத்தின் பிடியிலிருந்து மீள்வதற்கு நீண்டகாலம் பிடிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

Sponsored


வெள்ளத்தின் சேதத்திலிருந்து கேரள மாநிலத்தை மீட்கும் வகையில், முதல்வரின் நிவாரணத் திட்டத்துக்கு சிறப்பு லாட்டரி விற்பனை மூலமாக நிதி திரட்ட கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்து கேரள நிதித்துறை அமைச்சரான தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நிவாரண நிதிக்காகச் சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை மூலமாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

இந்தச் சிறப்பு லாட்டரிக்கு ஆஷ்வாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 250 ரூபாய். அக்டோபர் 3-ம் தேதி இந்த லாட்டரி சீட்டின் குலுக்கல் நடைபெறும். ஒவ்வொரு வரிசையிலும் முதல் பரிசாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன், 1,08,000 பேருக்கு தலா 5,000 ரூபாய் பரிசுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனை மூலம் 100 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய நிதித்துறை அதிகாரிகள், ``மொத்தம் 96 லட்சம் லாட்டரி சீட்டுகளை அச்சடித்து அதை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு லாட்டரி மொத்தம் 9 வரிசைகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் இருந்து முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லாட்டரி மூலம் திட்டமிட்டபடி நிதி திரட்டப்படும்’’ என நம்பிக்கை தெரிவித்தனர். 
 Trending Articles

Sponsored