``வீடுகளை சீரமைக்க வட்டி இல்லா கடன்” - கேரள முதல்வர் அறிவிப்பு!Sponsoredமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என  கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். 


கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் மக்கள் பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மழையின் தாக்கம் குறைந்த பின்னர் வெள்ளம் குறைய ஆரம்பித்தது. இதன் பின்னர் மக்கள் முகாம்களில் இருந்து, தங்களின் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், பெரும்பாலான வீடுகள் மழை வெள்ளத்தாலும், சேர் மற்றும் சகதியினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். 

Sponsored


இந்த நிலையில், நேற்று நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் தங்களது உடைமைகளை இழந்து வாடுகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைக்க ரூபாய் ஒரு லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் வட்டித்தொகையை அரசே செலுத்தும்” என்றார்.

Sponsored


அதேபோன்று நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் வங்கி கணக்கில் தலா 10,000  ரூபாய் செலுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அரசு சார்பில் நடக்கும் ஓணம் பண்டிகையை ரத்து செய்திருந்தது. இந்நிலையில் ``லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஓணம் பண்டிகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டாடுவோம்” என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.Trending Articles

Sponsored