கர்நாடக அமைச்சரை பகிரங்கமாக தாக்கிய நிர்மலா சீதாராமன்!கர்நாடகாவில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Sponsored


Photo Credit:ANI

Sponsored


கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தின் வெள்ள பாதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் மேற்பார்வையிடச் சென்றிருந்தார். இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமனை, கர்நாடக அமைச்சர் சா.ரா.மகேஷ் (சுற்றுலாத்துறை அமைச்சர்) நேரமின்மை காரணமாக வெளியேற சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர் சந்திப்பிலேயே, `` நான் எனக்குக் கொடுக்கப்பட்ட நிகழ்வு அட்டவணையை (itinerary) தான் பின்பற்றி வருகிறேன். நான் ஒரு மத்திய அமைச்சர். மாவட்ட பொறுப்பில் உள்ள அமைச்சரின் கட்டளைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. நம்பவே முடியவில்லை'' என்று அமைச்சர் சா.ரா.மகேஷை கடுமையாகத் தாக்கினார். அப்போது ஒருவர், இவையெல்லாமே கேமராக்களில் ரிக்கார்டிங் செய்யப்படுகிறது என்று கூறியபோது, ``ரிக்கார்ட் பண்றதுனா பண்ணிக்கோங்க. உங்களுக்கு என்னவெல்லாம் ரிக்கார்ட் செய்ய வேண்டுமோ பண்ணிக்கலாம்" என்று காட்டமாகவும் பேசிவிட்டார். இதனால் பத்திரிகையாளர்  கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Sponsored
Trending Articles

Sponsored