காலநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு ஆபத்து : எச்சரிக்கும் இங்கிலாந்து தொண்டு நிறுவனம்Sponsoredகால நிலை மாற்றத்தால் இந்தியாவில் மேலும் சில மாநிலங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்டு என்ற தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகிறது. தற்போது கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கும் இந்த நிறுவனம் சேவை செய்து வருகிறது. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 பேருக்கு இந்த அமைப்பு ஆதரவளித்துள்ளது. மேலும், முகாம்களில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கும் இந்த நிறுவனம் உதவி வருகிறது.

Sponsored


கிறிஸ்டியன் எய்டு நிறுவத்தின் நிர்வாகியான காட் க்ராமெர் கூறும்போது, `` தொடர்ந்து உலக வெப்பமயமாதல் தொடர்ந்துகொண்டே உள்ளது. இது இன்னும் தொடர்ந்தால் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் கேரளாவைப் போலவே பெரும் சேதத்தைச் சந்திக்கும். வெப்பமண்டலங்களில் இன்னும் 10 டிகிரி செல்ஸியஸ் அதிகம் வெப்பம் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தால் வறட்சி ஏற்படும், பருவ மழைக்காலங்களில் அதிக மழையினால் வெள்ளம் வரலாம் என ஆய்வு முடிவுகளும் தெரிவித்துள்ளன. இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது கால நிலை மாற்றத்தைப் பற்றிய ஓர் எச்சரிக்கையாகும். ஒருவேளை நாம் மாசு ஏற்படுத்தும் மாசுபாட்டைக் குறைக்காவிட்டால் இதுபோன்ற பேரிடர்கள் தொடர்ந்து நிகழும். இயற்கை பேரிடர்கள் ஏழ்மையான மக்களையே அதிகம் பாதிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored