`உயரப்பறக்க நினைத்தால் அவள் இறந்துவிட்டாள்'- தற்கொலைக்கு முன் அம்மாவுக்கு மகள் எழுதிய உருக்கமான கடிதம்Sponsored'உங்களை மிகவும் நேசிக்கிறேன் அம்மா' என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள குடியிருப்பில், பிரியங்கா குப்தா என்ற பெண் தனது தாயுடன் வசித்து வந்தார். இவரின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு  இறந்ததால் அந்த இரண்டு அறை கொண்ட குடியிருப்பில் தாய், மகள் மட்டும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை பிரியா தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரின் தாய் தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் பிரியாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரியாவின்  அறையில் காவல்துறையினர் ஆய்வு செய்ததில் தற்கொலைக் கடிதம் ஒன்று கிடைத்தது. ஒரு பக்க அளவில் அந்த தற்கொலை கடிதம் இருந்தது.

Sponsored


இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ``பிரியாவின் அறையில் இருந்து தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. சிறகு இல்லா பறவை அவள். உயரப்பறக்க நினைத்தால், ஆனால் அவள் இறந்துவிட்டாள். கடவுளின் மீதான நம்பிக்கை ஒரு போதும் இழந்து விடாதீர்கள். இறுதியாக நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அம்மா” என்று இருந்தது. பிரியாவின் இணையதள பயன்பாட்டை ஆராய்ந்ததில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது, தனிமையை எப்படித் தவிர்ப்பது. எப்படித் தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போன்ற வீடியோக்களையும் அது தொடர்பானவற்றையும் கடந்த சில நாள்களாகப் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. பிரியா ஆடை வடிவமைப்பாளர் படிப்பை முடித்துள்ளார். அதில் அவர் சிறப்பாகவே தேர்ச்சி பெற்றுள்ளார். ஆர்வத்தின் பேரிலே இந்தப்படிப்பில் சேர்ந்துள்ளார். இவர் பல்வேறு ஃபேஷன் நிறுவனங்களில் இன்டன்ஷிப் முடிந்துள்ளார். தந்தையின் மரணம் மற்றும் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார்” என்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored