`பில்கேட்ஸ் ரூ.4.20 கோடி, ஆப்பிள் ரூ.7 கோடி..!' - கேரளாவுக்கு குவிந்துவரும் நிதியுதவிகள்



இயற்கை பேரிடர் சேதத்தில் இருந்து கேரளாவை மறு சீரமைக்க நிவாரண நிதியுதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன்வகையில், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும் நிதியுதவிகளை அறிவித்துள்ளன. 

Sponsored


கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய பருவமழை இடைவிடாது கொட்டித் தீர்த்து, அம்மாநிலத்தை வெள்ளக்காடாக மாற்றியது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக தங்களின் உடைமைகளை மக்கள் இழைந்துள்ளனர். இந்நிலையில், மாநிலத்தை மறு சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பலதரப்பிலும் இருந்து நிவாரண நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில், வெள்ளப் பாதிப்பால் ரூ.20,000 கோடிவரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது

Sponsored


Sponsored


இந்த நிலையில், அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் நிவாரண நிதியுதவியை அறிவித்துள்ளார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற தனது அறக்கட்டளை சார்பாக 6,00,000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 4.20 கோடி) கேரளா நிவாரண நிதியாக யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார். முன்னதாக, கேரளாவில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து அமெரிக்காவைச் சேர்ந்த `யுனிசெப்' அமைப்பு பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

இதேநேரத்தில், கணினி மற்றும் நுகர்வோர் துறையில் தலைசிறந்து விளக்கும் ஆப்பிள் நிறுவனமும் தற்போது உதவ முன்வந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில், `கேரளாவில், வெள்ளத்திலிருந்து மீண்டுவரும் மக்களுக்காகவும் அவர்களது மறுவாழ்வுக்காகவும், பள்ளி மற்றும் குடியிருப்புகளை மறுசீரமைக்க வேண்டி, ரூ.7 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்படுகிறது. இந்த தொகை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைக்கப்படும். மேலும், ஐடியூன்ஸ் மற்றும் ஆப் ஸ்டோர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் கேரளாவுக்காக நிவாரண நிதியை அளிக்க டொனேஷன் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Trending Articles

Sponsored