`வர்றதுக்கு நேரமில்லை; அம்மாவின் அஸ்தியை கூரியரில் அனுப்புங்க'- தந்தையைப் பதறவைத்த மகள்Sponsored`தாயின் இறுதிச்சடங்குக்கு வர நேரமில்லை. அஸ்தியைக் கூரியரில் அனுப்புங்கள்'' என்ற மகளின் வார்த்தைகள் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் திராஜ் பட்டேல் - நிருபென் பட்டேல் தம்பதி. வயதான இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது ஒரே மகள், திருமணம் முடிந்து அகமதாபாத்தில் வசித்து வருகிறார். திராஜ் பட்டேல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். நிருபென் தான் தனது கணவரை கவனித்து வந்துள்ளார். அவரின் மகள் எப்போதாவது வந்து பார்க்க வருவார் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் திடீரென நிருபென் உயிரிழந்தார். இதையடுத்து தாயின் இறப்புச் செய்தியை அக்கம்பக்கத்தினர் அவரின் மகளிடம் தொலைபேசி வாயிலாகக் கூறினர். ஆனால் அவரோ கூலாக, `எனக்கு அதிக வேலை இருக்கிறது; வருவதற்கு நேரமில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் இந்தத் தகவலை அவரின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரோ மகளின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். `என்னதான் அவள் எங்களைப் பார்த்துக்கொள்ளவில்லை என்றாலும் இறுதிச்சடங்குக்குகூட வர அவளுக்கு நேரமில்லையா' என நொந்துகொண்டார். அவரின் நிலையை அறிந்த அக்கம்பக்கத்தினர் இறுதிச்சடங்கை அவர்களாகவே செய்துள்ளனர்.

Sponsored


இதையடுத்து, ஈமச்சடங்கு செய்வதற்கு தாயின் அஸ்தியை வந்து வாங்கிச்செல்லுமாறு தகவல் கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம் `தனக்கு நேரமில்லை. அஸ்தியைக் கூரியரில் அனுப்பி விடுங்கள்' என்று கூறியுள்ளார். இந்தப் பதிலை சற்று எதிர்பாராத அவரின் தந்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளனர். ஆனால், இது குடும்பப்பிரச்னை இதில் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளனர் போலீஸார்.

Sponsored
Trending Articles

Sponsored