‘செப்டம்பர் 3-ம் தேதி புது முதல்வர் பதவியேற்பார்’ - குமாரசாமியின் அதிர்ச்சி தகவல்கர்நாடகாவில் செப்டம்பர் 3-ம் தேதி புது முதல்வர் பதவியேற்பார் என முன்னதாக கூறியிருந்தேன் என குமாரசாமி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Sponsored


கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவில் பல பிரச்னைகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் கூட்டணியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அங்குச் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசும் போது, “தேர்தலின் போது நான் தான்  மீண்டும் முதல்வராவேன் என்ற நம்பிக்கையில்  இருந்தேன். ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கவில்லை.  மக்களின் ஆசியுடன் நான் மீண்டும் முதல்வராவேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று கூறியிருந்தார். இது கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

Sponsored


இதையடுத்து நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, “ செப்டம்பர் 3-ம் தேதி புது முதல்வர் பதவியேற்பார் என முன்னதாக நான் கூறியிருந்தேன். எத்தனை நாள்கள் நான் முதல்வராக இருந்தேன் என்பது முக்கியமல்ல, எதிர்காலத்துக்குத் தேவையான வேலையை தற்போதே சிறப்பாகச் செய்துவிட்டேன்” என பேசியுள்ளார். குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆகிய இருவரின் பேச்சும் கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.  

Sponsored
Trending Articles

Sponsored